Monday, January 18, 2010

Kurai Ondrum Illai (குறையொன்றும் இல்லை)


குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா! கோவிந்தா!!

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் எனக்கொன்றும் குறையில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா! கோவிந்தா!!

கலினாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா! கோவிந்தா!!

1990 - ம் வருடம் இந்த பாடலை நான் முதல் முறையாக கேட்டேன். பொதுவாக கடவுளிடம் எனக்கு 'இது' வேண்டும், 'அது' வேண்டும் என்று கேட்கும் படியாக தான் பாடலோ அல்லது செய்யுலோ இருக்கும், கடைசி பட்சம் ஞானம் அல்லது முக்தியையாவது வேண்டுவர். ஆனால் இந்த வரிகள் அதனில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

ஆரம்ப நாட்களில் கேட்கும் போது எனக்கு ஒன்றும் தோன்றவில்லை, ஆனால் சமீப வருடங்களில் கேட்கும் போது இந்த பாடலில் சில மறை (ஒளிவு) பொருள் இருபதாக கருதி மீண்டும் மீண்டும் தொடர்ந்து பல முறை தொடர்ச்சியாக கேட்க தொடங்கினேன், பிறகு அதில் சில மறை (ஒளிவு) பொருள் இருப்பதாக கருதினேன். அதற்கு சாசுதம் அளிப்பது போல் 1925-ம் ஆண்டு திருமலை திருப்பதி-ல் நிகழ்ந்த ஒரு சம்பவம் இந்த செய்யுலை தொடுக்க "இராஜாஜி"-க்கு காரணமாக அமைத்திருக்கலாம் என்று "கோபால் காந்தி" கூறியது.

மேலும் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவருக்கு "இராஜாஜி" வக்காலத்து வாங்கியதாக ஒரு சான்று உள்ளது. அதன் பொருட்டு "இராஜாஜி" தனது நுண்ணறிவை (Laser sharp intellectual) பயன்படுத்தி இந்த படலை தொடுத்துள்ளார். மேலும் இது "இராஜாஜி" அவர்கள் எழுதியதாக இருந்தாலும்; அவர் அனேக / அனைத்து இடங்களில் வேறு ஒரு மனிதன் (பாதிக்கப்பட்ட மனிதன்) உரைப்பது போல் கையாண்டுள்ள விதம் அருமை.

என் மனதில் தோன்றும் சில அர்த்தங்கள்:-

வேதத்திற்கு எல்லாம் தலைவா (அ) எளியோன் ஒருவன் பார்க்க முடியாத உன்னை என் கண்ணால் தரிசிக்க இயலாது அனுமதி மறுக்கப்பட்டாலும், எனக்கு குறை ஒன்றும் இல்லை. எனக்கு தேவையானதை தர நீ இருக்கும் பொது நான் அங்கு வந்துதான் உன்னை காண வேண்டுமா? திரைக்கு அப்பால் உள்ள உன்னை வேதம் சொல்பவர் மட்டுமே காண முடிந்தாலும் எனக்கு யாது குறை? குறை ஒன்றும் இல்லை!!

இவ்வாறாக அந்த பாடல் தொடர்கிறது. ஒரு சாதாரண மனிதன் தன்னை எந்த ஒரு அளவுக்கு கடவுளிடம் சரணாகதி படுத்துகிறான்!?! ஆஹா அற்புதம்!!

எது எப்படியோ MSS அவர்கள் குரலில் பாடல் கேட்பதக்கு இனிமை. இந்த பாடல் இப்போது மேற்கத்திய இசையிலும் வந்துள்ளது, அதுவும் கேட்க இனிமையாக உள்ளது.



இங்கு சொல்லப்பட்ட அனைத்தும் என் மனதில் தோன்றிய சொந்த கருத்துகள் மட்டுமே, இதை தான் "இராஜாஜி" அவர்கள் கூறினார் என்று நான் சொல்லவில்லை / வாதிடவில்லை, உங்களுக்கு வேறு அர்த்தம் தோன்றினால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

நன்றி : Wikipedia, The Hindu, Google Transliteration



2 comments:

Anonymous said...

an amazing song (no need to tell that)...

the meaning that you have given is really surprising and seems to be true too.

thanks for providing the lyrics.. and a different meaning.
--Madhes

Unknown said...

புது அர்த்தம் ஏதும் புனையப்படவில்லை.
உள்ளபடியே உரைக்கப்பட்டது அதுவே என
உள்ளுணர்வு உரைக்கின்றது.